Saturday, January 15, 2011

தோள்சீலைக் கலகம் புத்தக வெளியீடு

வரலாற்று ஆய்வாளரும், நமது ரீச் பவுண்டேஷனின் கல்வெட்டு ஆசிரியருமான திரு. எஸ்.ராமசந்திரன், திரு. கணேச நாடாருடன் இணைந்து எழுதிய வரலாற்று ஆய்வு நூலான தோள்சீலைக் கலகம் - தெரிந்த பொய்களும், தெரியாத உண்மைகளும் என்ற நூலின் வெளியீட்டு விழா, சென்னை மயிலாப்பூரில் உள்ள பாரதீய வித்யா பவன், மினி ஹாலில் கடந்த 07-01-2011 அன்று மாலை நடந்தது.


ரீச் பவுண்டேஷனின் தலைவரும், தொல்லியல் வல்லுனருமான தியாக.சத்தியமூர்த்தி அவர்கள் நூலை வெளியிட, நடனமணி, கலைஞர் ஸ்வர்ணமால்யா அவர்கள் முதல் ப்ரதியைப் பெற்றுக் கொண்டார்.

துவக்க உரை ஆற்றிய திரு.கணேச நாடார் அவர்கள் இந்நூல் ஒரு வரலாற்று ஆய்வே தவிர, எந்த இனத்தவரையும் குறித்து எதிர்த்தோ, ஆதரித்தோ எழுதப்பட்டதல்ல என்று தெளிவு படுத்தினார்.

திரு. தியாக. சத்தியமூர்த்தி பேச்கையில், ஆய்வு எனும் சொல்ல் வரலாற்று ஆய்வாளர்களிடையே குறைந்து வரும் நாளில், சமூக ஆய்வும், சரித்திரா ஆய்வும் ஒருசேரச் செய்து, மேனாட்டு மோகமன்றி, தன்னிலையாக, தெளிவாக சரித்திரப் பதிவை செய்யும் முதல் நூல் இதுவாகத்தான் இருக்கும் என்று புகழுரைத்தார்.

நடனக் கலைஞர் சொர்ணமால்யா பேசுகையில், தாம் வாசித்த முதல் சமூக ஆய்வு நூல் இதுதான் என்றும், இளைஞர்களுக்கு சமூகவியலைப் பாடமாக சொல்லித் தரக்கூடிய வகையில் இந்நூல் அமைந்துள்ளது என்று பேசினார்.

திருவாளர்கள் செந்தீ நடராசன் - நிறுவனர், செம்பவழம் ஆய்வுத் தளம், எஸ்.டி. நெல்லை நெடுமாறன் - வரலாற்று ஆய்வாளர், ஜெ. சிதம்பரநாதன் - ஆய்வாளர், சமூக இயக்க ஆய்வு மையம் (SDRC), ப்ரவாஹன் - ஆய்வாளர், SISHRI ஆகியோர் சிறப்புரை ஆற்றினார்கள். காலமின்மையால் ,ஏற்புரையை திரு. எஸ். இராமச்சந்திரன், நூலாசிரியர் சுருக்கமாக முடித்துக் கொண்டார். இது ஒரு கூட்டு முயற்சி என்றும், ஏற்புரையை தமது சிஷ்ரி குழுமம் சார்பாக தாம் ஏற்றுக் கொள்வதாக எளிமையாக ஏற்புரையை முடித்தார்.

நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் நந்தர் (எ) தங்கம் விஸ்வநாதன் மிக அருமையாக நிகழ்ச்சியைத் தொகுத்து அளித்தார். கவிஞர் ஓகை நடராசன், ரத்தினச் சுருக்கமாக நன்றியுரையை முடித்துக் கொண்டார்.

சமூகம் சார்ந்த எழுத்து, வரலாற்றுப் பதிவு இரண்டுமே, இருமுனைக் கத்திகள். அப்படி ஒரு நூல் வெளியிடுபவர், அறிவியல் பூர்வமாகவும், சான்றுகளுடனே வரலாற்றைப் பதிவு செய்யும் மத்திய தொல்லியல் ஆராய்ச்சிக் கழகத்தில் தலைமை பொறுப்பு ஏற்று ஓய்வு பெற்ற தியாக.சத்தியமூர்த்தி அவர்கள். முதல் நூலைப் பெறுபவர்,பிரபலம் அடைந்த நடனமணி, நடிகை. அப்படி இருவரும் நூல் வெளியீட்டுக்கு, அதுவும் சமூகவரலாற்று நூலை வெளியிடமுன்வந்தார்கள் என்பதே, நூல் ஆசிரியர்களின் சரித்திர ஆய்வுக்கும், சிந்தனைத் தெளிவிற்கும் ஒரு முன் உதாரணம்.

அத்தகைய ஆய்வுக்கூற்றுகளை அழகாகக் கையாண்டு, நல்லதொரு நூலை தமிழ் மக்களுக்கு அளித்த SISHRI.ORG அமைப்பாளர்களுக்கும், நூலாசிரியர்களுக்கும், ரீச் பவுண்டேஷன் தனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறது.


Tamilhindu.com's review on the book is here

2 comments:

Anonymous said...

Great article. Thank you for posting

Anonymous said...

I notice this material very valuable. Thanks for the important information along with insights that you've so furnished in this case. Continue the good work!